வருகைக்கு நன்றி!

இக்காலகட்டத்தில் நிறைய பேர் வலைபதிவு எழுத தொடங்கிவிட்டனர். அவர்கள் வலைப்பதிவின் வரலாற்றை பற்றி அறிந்து கொள்ள எனக்கு தெரிந்த சிறு பதிவை எழுதுகிறேன். web blog என்ற பெயர் முதன் முதலில் 1997 ம் ஆண்டு உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதன் தற்போதைய பெயரான blog என்ற சொல்லை பீட்டர் மெர்ஹோல்ஸ்என்பவர் முதன் முதலில் பயன்படுத்தினார். ஆரம்பத்தில் மேம்பட்ட வசதிகள் எதுவும் இல்லாமல் கருத்துக்களை வெளியிடும் ஒரு சாதாரண பக்கமாகவே வலைபதிவு இருந்தது. அதன் பின் 1994 ம் ஆண்டு வலைபதிவில் சில வடிவமைப்புகளுடன் கூடிய பக்கங்களை ஐஸ்டின் ஹால் என்பவர் அறிமுக படுத்தினார். இவர் வலைபதிவுகளின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். 1996 ம் ஆண்டு முதன் முதலாக சாங்கா என்ற வலைத்தளம் வலைபதிவு சேவையினை வழங்க தொடங்கியது. டிசம்பர் 2005 க்குள் அந்த வலைதளத்தில் தொடங்கப்பட்ட வலைப்பதிவுகளின் எண்ணிக்கை 50,000. ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் www.blogger.com என்ற வலைபதிவு சேவை தொடங்கப்பட்டது. இநத தளத்தை 2003 ம் ஆண்டு கூகுல் நிறுவனம் வாங்கியது. இன்று வீட்டுக்கு ஒரு முகவரிபோல, இனைய இணைப்பு வைத்திருப்பவர்களில் ஏறக்குறைய அனைவரும் blogger தளத்தில் தங்களுக்கான வலைப்பதிவை வைத்துள்ளனர்.